இனி மக்களை ஏமாற்ற முடியாது - ரேஷன் கடையில் வந்த அதிரடி மாற்றம்..!
ரேஷன் கடைகளில் இனி பயனாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்களை அறிய புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வந்த புகார்கள்
ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர தங்களுக்கு விநோயோகம் செய்யப்படுவதில்லை என பயனாளிகள் தொடர்ந்து அவ்வப்போது புகார்களை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, பொருட்களை வாங்க சென்றால் கடைகளில் பொருட்கள் காலியாகி விட்டது என ரேஷன் கடை பணியாளர்கள் கூறுவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழக அரசும் இது போன்ற புகார்களை தவிர்க்க பல்வேறு புது புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மக்கள் மீண்டும் புகார்
முதலில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான செயலி ஒன்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கி வைத்திருந்தார்.
அப்போது பேசிய சக்கரபாணி, இந்த செயலி மூலம் மாதம் தோறும் நியாய விலை கடைகளில் பொருட்களை விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் என உறுதியளித்திருந்தார்.
எனினும், ரேஷனில் பொருள்களின் விநோயோகம் சரிவர இல்லையென்றே தற்போதும் மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
TNEPDS என்ற மொபைல் ஆப் அறிமுகம்
இப்படியான முறைகேடுகளை தடுப்பதற்காகத்தான், தற்போது TNEPDS என்ற மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்திருக்கிறது.
ரேஷன் கடை பயனாளர்கள் இந்த செயலை பயன்படுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்கள் உணவு பொருட்களின் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விபரங்களை, துல்லியமாக அறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.