இரட்டை இலை தாமரையாக மாறிவிட்டது - கனிமொழி

Smt M. K. Kanimozhi DMK AIADMK BJP Erode
By Thahir Feb 17, 2023 02:18 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டதாக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

கனிமொழி விமர்சனம் 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் ஆணையம் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு வருகின்றனர்.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

the-double-leaf-has-become-a-lotus-kanimozhi

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது.

தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரரை தாங்கி பிடிக்கும் நிலையை பெற்றுள்ளது என விமர்சித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் முதுகெலும்பை நிமிர்த்தி பேசுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலளித்தார்.

முதுகில் ஏறி சவாரி செய்து தமிழ்நாட்டை பிடித்துவிடலாம் என்று என்னும் பாஜகவுக்கு பாடம் புகுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார் கனிமொழி.