திமுக மகளிரணி மாநாடு - நேரலை வீடியோ
M K Stalin
DMK
By Fathima
தஞ்சாவூரில் ”வெல்லும் தமிழ் பெண்கள்” என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செங்கிப்பட்டி பகுதியில் ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தெரிவு செய்யப்பட்டு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளரான கனிமொழி எம்பி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலுர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1.25 லட்சம் பேர் ஒரே சீருடையில் கலந்து கொண்டுள்ளனர்.