ரஷ்யாவால் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிருடன் இருக்கிறார்களா? - புதிய தகவல்
உக்ரைனில் சரணடைய மறுத்ததால் ரஷ்ய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது ங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 6வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
இதில் உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கருங்கடலில் 40 ஏக்கர் பரப்பளவை கொண்ட சிறிய பாம்புத் தீவை சில தினங்களுக்கு முன் ரஷ்ய போர்க் கப்பல் முற்றுகையிட்டது. அங்கிருந்த உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூற அவர்கள் மறுத்து உக்ரைன் வீரர்களின் தளபதி ரஷ்ய படை வீரர்கள், தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டினார். இதன் ஆடியோ வெளியாகி வைரலானது.
இதனால் ஆத்திரத்தில் பாம்பு தீவை ரஷ்ய போர் கப்பல் கேப்டன் பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் 13 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு உக்ரைன் அதிபரும் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய படையினரால் பாம்பு தீவில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் 13 பேரும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இரு முறை நடத்திய தாக்குதலை உக்ரைன் படையினர் முறியடித்ததாகவும், கடைசியில் போராட ஆயுதங்கள் இல்லாததால் வீரர்கள் சரண் அடைந்ததாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய படையினர் உக்ரைன் வீரர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதிக்குகொண்டு சென்று கைதிகளாக அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.