தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி விடுமுறை - அதிகாரிகள் ஆலோசனை

Diwali Government of Tamil Nadu Festival
By Thahir Oct 22, 2022 04:02 PM GMT
Report

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமை பள்ளிளுக்கு விடுமுறைவிடக்கோரி கோரிக்கை எழுந்துள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி விடுமுறை 

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சனி,ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருந்தது.

நேற்று 3,300 அரசு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊரு்களுக்கு பயணித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை அடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்காக 1.66 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய் கிழமை என்பதால் தீபாவளி நாளான அன்றே ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை விடுமுறையா?

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதும் அவசியமாக உள்ளது.எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி விடுமுறை - அதிகாரிகள் ஆலோசனை | The Day After Diwali Is A School Holiday

இந்த நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி விடுமுறை அளிப்பது பற்றி முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.