ஆரிரோ ஆராரிரோ…நடுவானில் பறந்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தை - விமான பணியாளரின் மனித நேயம்
நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் நிறுத்தாமல் அழுத குழந்தையை விமான பணியாளர் தலாட்டி துாங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடாமல் அழுத குழந்தை
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குழந்தையின் தந்தை, ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனது தாய், மற்றும் தந்தையோடு வந்த குழந்தை ஒன்று நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்துள்ளது.

இதை கண்ட விமான பணியாளர் ஒருவர் குழந்தையை தன் தோளில் படுக்க வைத்து தலாட்டி துாங்க வைத்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் தந்தை எங்கள் குழந்தையை விமான பணியாளர் ஆறுதல் படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த விமான பணியாளருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏர் இந்தியா விமானத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.