கள்ளக் காதலருடன் ஜாலி செய்ய.. கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர மனைவி!

Sexual harassment Crime
By Irumporai Oct 10, 2022 04:16 AM GMT
Report

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படை உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொலை செய்த மனைவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் (42). இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

கள்ளக் காதலருடன் ஜாலி செய்ய.. கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர மனைவி! | The Cruel Wife Her Husband Killed Him

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்க நிலையில், இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கள்ளகாதல் விவகாரம்

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, வெற்றிவேலின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

கள்ளக் காதலருடன் ஜாலி செய்ய.. கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர மனைவி! | The Cruel Wife Her Husband Killed Him

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதில், கடந்த 2016இல் வெற்றிவேலின் புதுவீடு கட்டும் பணியை அவரது தங்கை கணவர் நாகராஜ் செய்துள்ளார்.

அப்போது, அவருக்கும் ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அறிந்த வெற்றிவேல், ரேவதியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நாகராஜூடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

கள்ளகாதலை கண்டித்த கணவர்

இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார். கடந்த மே மாதம் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார் ரேவதி. அதன்படி, தான் திருந்திவிட்டதாக கூறி மீண்டும் கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

தூக்க மாத்திரை கொடுத்து கொலை

இந்நிலையில், கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்த நிலையில், கள்ளக்காதலன் நாகராஜ், பாஜக பிரமுகர் ராஜேஷ், ரேவதி ஆகிய 3 பேரும் சேர்ந்து, வெற்றிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

கள்ளக் காதலருடன் ஜாலி செய்ய.. கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூர மனைவி! | The Cruel Wife Her Husband Killed Him

மறுநாள் கணவர் மயக்க நிலையில், இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார் ரேவதி. அவர்கள் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் விசாரணையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்