விடாத மூட நம்பிக்கை .. தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதிகள் : உறைய வைக்கும் பகீர் சம்பவம்
குஜராத் மாநிலத்தில் தங்களை தாங்களே நரபலி கொடுத்து கொண்ட தம்பதிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரபலி கொடுத்த தம்பதி
இந்த நவீன யுகத்திலும் இன்னமும் மூட பழக்க வழக்கங்களின் சில மக்கள் சிக்கி தங்களின் வாழ்க்கையினை தொலைத்து விடுகின்றனர், அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்துக்கு உட்பட்ட விஞ்சியா கிராமத்தில் வசித்து வந்தவர் ஹெமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி தங்களது இரண்டு குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக அவர்களது குடிசை வீட்டில் தினமும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இவர்கள் இருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குடிசை வீட்டில் கிடந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தம்பதியர் இருவரும் தங்களது தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் வண்ணம் இதற்காக பிரத்தியேகமாக இயந்திரம் (guillotine) ஒன்றை உருவாக்கி அவர்களது குடிசை வீட்டில் வைத்திருந்தனர்.
போலீசார் விசாரணை
பின் ஹோமகுண்டம் வளர்த்து அதில் தங்களது தலை உருண்டு விழும் வகையில் எந்திரத்தின் கயிற்றை இழுத்து தங்களை தாங்களே துண்டித்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் எழுதிய தற்கொலை கடிதமும் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளது.
அந்த கடிதத்தில், பெற்றோரையும் பிள்ளைகளையும் கொள்ளுமாறு உறவினர்களிடம் இந்த கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களை தாங்களே தலையை துண்டித்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.