உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு இதுதான் - சொந்த ராணுவம் கூட இல்லையாம் - இதான் காரணமா?

Vatican World
By Jiyath Sep 12, 2023 11:34 AM GMT
Report

உலகில் இஸ்லாமியர்களே வசிக்காத நாடு குறித்த தகவல்.

இஸ்லாம் மதம்

உலகிலேயே அதிக மக்கள் பின்பற்றும் மாதமாக கிறிஸ்துவ மதம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது இஸ்லாம் மதம் தான். அவர்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு இதுதான் - சொந்த ராணுவம் கூட இல்லையாம் - இதான் காரணமா? | The Country Where There Is Not A Single Muslim

உலகில் பல நாடுகளில் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் புனித தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா உள்ளது. எனவே சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

சமுத்ரயான்; 20,000 அடி ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்ப திட்டம் - மாஸ் காட்டும் இந்தியா!

சமுத்ரயான்; 20,000 அடி ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்ப திட்டம் - மாஸ் காட்டும் இந்தியா!

இஸ்லாமியர்கள் இல்லாத நாடு

இப்படி இருக்கும் நிலையில் ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு என்றால் அது ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகச் சிறிய நாடான வாட்டிகன் சிட்டி. இந்த நாடானது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது.

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு இதுதான் - சொந்த ராணுவம் கூட இல்லையாம் - இதான் காரணமா? | The Country Where There Is Not A Single Muslim

உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாக வாட்டிகன் சிட்டி உள்ளது. ஏனெனில் இங்குதான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார். இந்த நாட்டில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.

இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர்.

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு இதுதான் - சொந்த ராணுவம் கூட இல்லையாம் - இதான் காரணமா? | The Country Where There Is Not A Single Muslim

அன்று தொடங்கி இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள் தான் வாட்டிகன் சிட்டியை பாதுகாக்கின்றனர். 2019 புள்ளி விவரப்படி வாட்டிகன் சிட்டியின் மக்கள் தொகை 453 மட்டுமே.