ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் எந்தவித தாமதமும் செய்யவில்லை - நீதிபதி ஆறுமுகசாமி
ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் எந்தவித தாமதமும் செய்யவில்லை என ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை தாக்கல்
ஜெயலலிதா மரணத்தில் மரணம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது.
5 ஆண்டுகள் நடைபெற்று வந்த விசாரணை அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

தாமதம் செய்யவில்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் குறித்து 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையம் நீதிமன்றம் போல் செயல்பட்டதாக உச்சநீதிமன்றமே கூறியது. விசாரணை அறிக்கை 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்ததாக கூறினார்.
மேலும் சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்ததது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், சசிகலா நேரில் வர தயாரில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை.
இந்த விசாரணை எனக்கு நிறைவாக உள்ளது என்றார்.மேலும் இந்த விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.