நாய் குட்டிகளை பாதுகாத்த நாகப்பாம்பு - யாரையும் அருகில் வரவிடாமல் சீறி நின்றதால் பரபரப்பு

Viral Video Cuddalore Snake
By Thahir Dec 12, 2022 05:54 AM GMT
Report

3 நாய்குட்டிகளை நாகப்பாம்பு பாதுகாத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீறிய நாகப்பாம்பு 

கடலுார் மாவட்டர் பாலுார் கிராமத்தில் சர்க்கரை என்பவர் வீட்டில் வளர்த்த நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றது.

நேற்று பிற்பகல் உணவு தேடி தாய் நாய் வெளியே சென்ற நிலையில், அங்கு வந்த நாகபாம்பு ஒன்று நாய் குட்டிகள் அருகே படுத்துக் கொண்டது.

The cobra protected the puppies

பின்னர் யாரும் நாய்க்குட்டி அருகே வராத படி படம் எடுத்து சீறிக் கொண்டிருந்தது. தாய் நாய் தனது குட்டிகளை பார்க்க வந்த போது பாம்பை கண்டு குறைத்த படி அங்கிருந்து ஓடியது.

இதை கண்டு வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் படி அங்கு வந்த பாம்பு பிடி வீரர் செல்லா அங்கு வந்து சீறிய பாம்பை பிடித்துச் சென்றார்.