கவலைப்படாதீங்க பாண்டே..! கையை பிடித்து ஆறுதல் சொன்ன முதலமைச்சர்
பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை காலமானதை அடுத்து அவரின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பாண்டேவுக்கு ஆறுதல் சொன்ன முதலமைச்சர்
சாணக்யா என்ற ஊடகத்தின் சி.இ.ஓவும், பத்திரிக்கையாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஊவே.,ரகுநாதாச்சாரியார் (84) வயது மூப்பில் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரபல பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகு நாதாச்சார்யாவின் மறைவையொட்டி அவரது வீட்டிற்குச் சென்று அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து, ரகு நாதாச்சார்யாவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் ரங்கராஜ் பண்டேவின் கைகளை பிடித்து கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறினார்.