திடீரென தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் - ஆடிப்போன அதிகாரிகள்
கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அவைகள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
முதலமைச்சர் திடீர் விசிட்
அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்த அவர் , ஓமலூரில், உள்ள தனி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் ஆய்வு மேற்கொண்டார். திடீரென முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 4 மாவட்ட விவசாய சங்கதினரை சந்தித்து பேசினார்.