முதலமைச்சர் மதிநுட்பத்துடன் நடந்து கொண்டார் - சபாநாயகர் அப்பாவு பாராட்டு
சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிநுட்பத்துடன் செயல்பட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு நன்றி
கடந்த 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது ஆளுநர் தனது உரையில் அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி, திராவிட மாடல் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.
இதற்கு முதலமைச்சர் ஆளுநரின் உரை வருந்தத்தக்கது என தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் அவை மரப்பை மீறி பாதியிலேயே வெளியேறினார்.
இதற்கு திமுக கூட்டணி கட்சியனர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.
இச்சம்பவம் குறித்து பேரவையில் சபாநாயகர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், உரையில் சில பகுதிகளை விடுத்தும் சில பகுதிகளை இணைத்தும் ஆளுநர் பேசியதால் பேரவையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.
சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட்ட முதலமைச்சருக்கு நன்றி என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் மாண்பை காக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிநுட்பத்துடன் செயல்பட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.