இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை - அதிமுகவில் தொடரும் பதற்றம்

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Apr 12, 2023 03:01 AM GMT
Report

தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை - அதிமுகவில் தொடரும் பதற்றம் | The Case Followed By Eps Will Be Heard Today

ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்து போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அதிமுக கட்சியினர் அறிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி நாடினார். ஆனால் தற்போது வரையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

இதனால், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்கள் விஷயம் என்னவென்றால், நீதிமன்றம் உத்தரவின் கீழ் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை. தன்னிச்சையாக செயல்பட தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு.