மேற்கூரை மீது ஏறி பெண்ணை தாக்க திடீரென குதித்த காளை... - தெறித்தோடிய மக்கள்...!

Viral Video
By Nandhini Dec 26, 2022 06:44 AM GMT
Report

மேற்கூரை மீது ஏறி பெண்ணை தாக்க திடீரென குதித்த காளையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை தாக்க திடீரென குதித்த காளை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேற்கூரை மீது ஒரு காளை ஏறி நின்றுக்கொண்டிருக்கிறது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை தாக்க அந்த காளை திடீரென மேற்கூரையிலிருந்து கீழே குதித்தது. ஆனால், நல்ல வேளையாக அந்த அப்பெண் தப்பித்து விடுகிறார். காளை குதித்த வேகத்தைப் பார்த்தும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தெறித்து ஓடினர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

the-bull-jumped-suddenly-viral-video