துாங்கி கொண்டிருந்த தம்பியை சரமாரியாக குத்தி கொன்ற அண்ணன்
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி கூலித்தொழிலாளியான இவருக்கு முகிலா என்ற மனைவியும்,லிங்கேஸ்வரன் மற்றும் தேவபிரகாஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனான லிங்கேஸ்வரன் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவரது தம்பி தேவபிரகாஷ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் தேவபிரகாஷ் தனது தாயார் முகிலாவிடம் தகராறு செய்துள்ளார். இதை தட்டி கேட்ட அண்ணன் லிங்கேஸ்வரனுக்கும் அவரது தம்பி தேவபிரகாஷ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தூங்கி கொண்டிருந்த தனது தம்பி தேவபிரகாஷை அண்ணன் லிங்கேஸ்வரனை கத்தியால் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதில் தேவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜாபாத் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் வாலாஜாபாத் போலீசார் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தேவபிரகாஷ்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவரான அண்ணன் லிங்கேஸ்வரன் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலைச் செய்யப்பட்ட தேவபிரகாஷ் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் , மதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் இவர் குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan