ரோஸ் மில்க் வாங்கி குடித்த சிறுவன் உயிரிழப்பு..!

Chennai Tamil Nadu Police
By Thahir May 28, 2022 05:46 PM GMT
Report

சென்னையில் ரோஸ் மில்க் வாங்கி குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன்.

ரோஸ் மில்க் வாங்கி குடித்த சிறுவன் உயிரிழப்பு..! | The Boy Who Bought And Drank Rose Milk Died

இவருக்கு 3 மகன்களும் உள்ளனர். இவரின் இரண்டாவது மகன் வசந்தகுமார்(11) இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 27-ந் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்த படி வீடு திரும்பியுள்ளார்.

வீடு சென்ற சிறுவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்டுள்ளார்.

அப்போது அந்த சிறுவன் ரோஸ்மில்க் வாங்கி குடித்ததில் இருந்து தனக்கு வாந்தி,மயக்கம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

உடனே தாய் திவ்யா தனது மகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனை சென்ற சிறுவனை சோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் திவ்யா உடனடியாக கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் பெத்துராஜ் என்பவர் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் உரிமையாளர் பெத்துராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெத்துராஜ் தனது கடை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் வீட்டிலேயே தயார் செய்வதாகவும், அவரிடம் இருந்து வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் ரோஸ்மில்க் தயாரித்து கொடுத்து ஆனந்தராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோஸ்மில்க் வாங்கி கொடுத்த சிறுவன் உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.