சட்டப்பேரவை பதிலுரை! விஜய் விளக்கம்
Vijay
By Fathima
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் எனது உடல்மொழி ஏதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பதிவில்,
சட்டப்பேரவையில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
