ஆ...தள்ளு...தள்ளு...போலீசாரை கிண்டலடித்த பாஜகவினர்..!
நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அழைத்துச் சென்ற அரசுப் பேருந்து திடீரென பழுதடைந்து நின்றதால் அக்கட்சியினர் போலீசாரை கிண்டல் செய்தனர்.
சாலை மறியல் செய்ய முயன்ற பாஜகவினர்
நாகை அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனிலும், அரசுப் பேருந்திலும் ஏற்றிச் சென்றனர்.
போலீசாரை கிண்டல் அடித்து கோஷம்
அப்போது அரசுப் பேருந்து இன்ஜின் கோளாறு காரணமாக வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் பேருந்தை பின்பக்கமாக கை வைத்து தள்ளி நகர்த்தினர்.
பேருந்தில் இருந்த பாஜகவினர் போலீசாரை கிண்டல் அடித்தவாறு ஆ...தள்ளு...தள்ளு என கோஷங்களை எழுப்பினர்.