எனக்கு பைக்கே வேண்டாம் யா.. பெட்ரோல் விலை உயர்வால் பைக்கை ஏரியில் தூக்கி வீசிய நபர்

Telangana Congress Hyderabad PetrolDieselPriceHike
By Irumporai Jun 12, 2021 04:09 PM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் கடந்த சில வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு தற்போது திடிரென பெட்ரோல் டீசல் விலைநாளுக்கு நாள் ராகெட் வேகத்தில் உயர்வதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸை சார்ந்த ஒருவர் தனது இரு சக்கரவாகனத்தை ஏரியில் வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .