பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது யார் யாருக்குன்னு தெரியுமா...? - இறுதி பட்டியல் வெளியீடு...!

Football FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Nandhini Feb 11, 2023 01:26 PM GMT
Report

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

the-best-fifa-football-awards-2022

பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது -

இந்நிலையில், சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தங்க ஷூவை தட்டிச் சென்றார்.

இவர் மொத்தம் 8 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தார். இதனையடுத்து, அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.

காயம் காரணமாக உலகக் கோப்பையை தவறவிட்ட பிரான்ஸ் வீரர் பென்சிமா , கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு சிறப்பாக விளையாடியதற்காக கடந்த ஆண்டு பலோன் டி'ஓர் விருதை பெற்றனர். வெற்றியாளர்கள் பிப்ரவரி 27ம் தேதி பாரிஸில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.