அம்மாவின் அன்புக்காக ஏங்கும் பிரதமர் மோடி - தடுப்பணைக்கு அம்மா பெயர்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைக்கு அவரது தாயின் பெயரை சூட்ட அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அம்மா மறைந்த ஹீராபென் பெயர் சூட்டப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் அம்மா பெயர்
கிர் கங்கா பரிவார் அறக்கட்டளையின் மூலம் ரூ.15 லட்சம் செலவில் ராஜ்கோட்-கலவாட் சாலையில் வாகுடாட் கிராமம் அருகே நயாரி ஆற்றின் கீழ்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த அணைக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளூர் எம்.எல்.ஏ தர்ஷிதா ஷா மற்றும் ராஜ்கோட் மேயர் பிரதீப் தாவ் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமர் மோடியின் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது நினைவாக கட்டப்படுவதால் தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்.
இது மற்றவர்களை தங்கள் அன்புக்குரியவர்களின் பிறகு ஏதாவது செய்ய அல்லது ஒரு நல்ல காரியத்திற்காக தானம் செய்து துாண்டும் என அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் செலவில் தடுப்பணை
கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை கடந்த நான்கு மாதங்களில் நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் 75 தடுப்பணைகளை கட்டியுள்ளது.
சமீபத்திய அணை இரண்டு வாரங்களுக்குள் கட்டி முடிக்கப்படும், இது, கிட்டத்தட்ட 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அணை 400 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். ஒருமுறை நிரம்பினால், ஒன்பது மாதங்களுக்கு வறண்டு போகாமல் இருக்கும்.
இது நிலத்தடி நீரை நிரப்பி, இறுதியில் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு உதவும், என்று அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.