அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அதிமுக அலுவலகம்
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.இதனால் வருவாய்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.
சீல் வைப்பு
இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.ஆனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாதத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அதிமுக அலுவலகத்திற்குச் அனைவரும் செல்ல இருப்பதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.