‘என் பேட் திருடு போய் விட்டது....’ - கத்தி கூச்சல் போட்ட ரபேல் நடால் - வைரலாகும் வீடியோ..!
‘என் பேட் திருடு போய் விட்டது....’என்று கத்தி கூச்சல் போட்ட டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தி கூச்சல் போட்ட ரபேல் நடால்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி வருகிற 29-ம் தேதி நரை நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் தொடக்க ஆட்டம் மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், என் பேட் காணாமல் போய் விட்டது. இதை பந்து எடுத்து போடும் சிறுவன் எடுத்து சென்று விட்டான் என்று கூறினார்.
இதனால், போட்டி தொடங்க காலதாமதமானது. பிறகு, பொறுமை இழந்த நடால் அந்த இடத்தில் தன் டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என்று கூச்சல்போட்டார்.
பிறகு, வேறு வழியின்றி டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாடச் சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
"The ballboy took my racquet" ?
— #AusOpen (@AustralianOpen) January 16, 2023
A definite first for Rafa!#AusOpen • #AO2023 pic.twitter.com/T4xqN4ZLBd