#LIVE:இலங்கை முழுவதும் குவிக்கப்படும் ராணுவம்!
இலங்கையில் இன்று அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நடைபெறும் நிலையில், பதற்ற நிலையை முன்னிட்டு நாடு முழுவதும் ராணுவப்படையினரை குவித்துள்ளனர்.
அவசர நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும்
சேவைகளை பேணுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பலத்த பாதுகாப்பு
இன்றைய தினம் கொழும்பு நகரிலும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர், போலீஸ் அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவின் ஸ்பெஷல் குழுக்கள் போன்றோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்தவும் கலைந்து செல்லவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலகத்தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர்த்தாரை, கண்ணீர் புகைக் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.