Friday, Apr 4, 2025

திருட்டு தனமாக திருமணம் செய்த நடிகை தேவயானி - எப்படி தெரியுமா?

Devayani
By Thahir 3 years ago
Report

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளம் வந்தவர் தேவயானி. சுஷ்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரையுலகிற்காக தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியின் பிரபலமான தொடரான கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றது அந்த தொடர்.

திருட்டு தனமாக திருமணம் செய்த நடிகை தேவயானி - எப்படி தெரியுமா? | The Actress Who Got Married As A Thief Is Needed

அதன் பின் நடிப்பில் ஆர்வம் காட்டாத நடிகை தேவயானி குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். நடிகை தேவயானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது காதல் கதை பற்றி தெரிவித்துள்ளார்.

தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து வந்த நிலையில் அவரின் தாய் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருட்டு தனமாக திருமணம் செய்த நடிகை தேவயானி - எப்படி தெரியுமா? | The Actress Who Got Married As A Thief Is Needed

இவர்களின் திருமணத்திற்கு கடைசி வரைக்கும் சம்மதம் கிடைக்கவில்லை.தன்னை குடும்பத்தினர் எங்கும் அனுப்பாமல் அடைத்து வைத்துள்ளனர்.

அதன் பின் நடு இரவில் தன் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலன் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டாங்களாம்.

2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இனியா,பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன. தேவயானி உன்னதமான காதல் கொண்டிருந்தார் ராஜ்குமாரன் மீது மேலும் காதலுக்கு எந்தவிதமான காரணங்களும் இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.