நடிகையிடம் ஆபாச சீண்டலில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பிய நபருக்கு உற்சாக வரவேற்பு
கேரளாவில் அரசுப் பேருந்தில் நடிகையிடம் ஆபாச சீண்டலில் ஈடுபட்டு சிறை சென்ற நபர் வெளியே வந்த நிலையில் அவருக்கு இளைஞர் கும்பல் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பேருந்தில் நடிகையிடம் ஆபாச சீண்டல்
கேரளா மாநிலம், கொச்சி அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா. மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த மாதம் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவர் அருகே இருந்த ஒரு வாலிபர் திடீரென தனது பேண்டினை கழற்றி ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த நந்திதா அதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் பற்றி பேருந்து நடத்துனரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்ட போது அந்த நபர் இறங்கி ஓட முயன்றுள்ளார். அவரை துரத்தி பிடித்த நடத்துனர் மற்றும் சக பயணிகள் அவரை பிடித்து நெடும்பாசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்தவருக்கு உற்சாக வரவேற்பு
அந்த நபரிடம் போலீார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஸவாத் என்றும் அவர் கோழிக்கோட்டைச் சேரந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்பு அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறை சென்ற ஸவாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை கேரளா ஆண்கள் சங்கம் மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலாத்காரம் செய்தால் மாலை அணிவிப்பார்கள்
இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை நந்திதா, ஸவாத்தை மிகவும் பிரமாண்டமாக வரவேற்க அவர்கள் எடுத்த முடிவு அவரை ஒரு வகையான நினைவுச் சின்னமாக மாற்றியுள்ளது.
இவர் தான் பாலியல் குற்றவாளிகளை தொடர்ந்து ஆதரிகின்றனர் பலாத்காரம் செய்பவர் ஜாமீனில் வந்தால் அவருக்கு மாலை அணிவிப்பார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டால் கவலைப்பட மாட்டமார்கள் என்று தெரிவித்துள்ளார்.