எனக்கு திருமணமே வேண்டாம்...40 வயதான நிலையிலும் அடம் பிடிக்கும் பிரபல நடிகை..!

Tamil Cinema Marriage
By Thahir May 21, 2023 07:36 AM GMT
Report

40 வயதாகியும் பிரபல நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளமால் இருப்பது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம் 

1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அக்ரஜன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி ராஜ். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

The actress is still unmarried at the age of 40

பின்னர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியின் தென்றல் சீரியல் மூலம் சினன்திரையில் அறிமுகமான ஸ்ருதி ராஜ் தொடர்ந்து திருமதி செல்வம், ஆபிஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்?

சிறிய இடைவெளிக்கு பின்னர் தாலாட்டு சீரியலில் ஸ்ருதி ராஜ் நடித்து வரும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The actress is still unmarried at the age of 40

மேலும் சூப்பர் சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள ஸ்ருதி ராஜ் தற்போது 40 வயதை கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வராது அதனால் நான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்னை பற்றியும் என் திருமணம் பற்றியும் என் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஸ்ருதி ராஜ் கூறியுள்ளார்.