54 வயதில் திருமணம் செய்ய போகும் பிரபல நடிகர் - வரன் தேடும் குடும்பத்தினர்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான எஸ் ஜே சூர்யா 54 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளமால் இருந்து வருகிறார்.
அதிகரித்த மவுசு
அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். நடிகர் மட்டுமின்றி பல படங்களை இயக்கியுள்ளார்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருவதால் பிசியாக இருந்து வருகிறார்.
விரைவில் திருமணம்
54 வயதான நிலையிலும் திருமணம் செய்து கொள்ளமால் இருந்து வரும் எஸ் ஜே சூர்யாவுக்கு அவரது குடும்பத்தினர் வரன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு வரப்போகும் பெண் கண்டிப்பாக ஒரு நடிகையாக இருக்க மாட்டார் என கூறப்படுகிறது.
விரைவில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.