பச்சிளம் குழந்தையுடன் தவித்த தாய் - தாசில்தார் செய்த நெகிழ்ச்சி செயல்
ஆந்திர மாநிலத்தில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மருத்துவமனை அழைத்து சென்று ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதியின்றி தவித்த பெண்ணுக்கு தாசில்தார் ஒருவர் தன்னுடைய அரசு வாகனத்தில் அப்பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் டவாங்கர் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் கிரிஸ். அப்பகுதியில் பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சாலையோரம் பச்சிளம் கை குழந்தையுடன் இரண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்து தன்னுடைய வாகனத்தை நிறுத்தச் சொல்லி அப்பெண்களிடம் விசாரித்ததில் பிறந்து 35 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் தவித்தது தெரியவந்துள்ளது.
தாசில்தார் கிரீஸ் உடனடியாக தன்னுடைய அரசு வாகனத்தில் பெண்களை குழந்தையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து தாசில்தார் கிரீசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.