தேர்தல் பணிகளில் ஓய்வின்றி உழைத்தவர்களுக்கு நன்றி - முக ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த பொறுப்புடன் அயராமல் களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தஹ்மிளாக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும் தங்கள்து வாக்கினை செலுத்தி சென்றனர்.
மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் கள நிலவரத்தை இரண்டு முறை ஆய்வும் செய்தார். இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபவர்களுக்காக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற ஜனநாயக திருவிழாவில் ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்களுக்கும், பணியாற்றிய தேர்தல் பணியாளர்களுக்கும் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்து கொள்வதாக, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் பணியும், பொறுப்பும் தற்போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையங்களைக் திமுகவினர் தொய்வின்றி, சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.