''நம்முடைய அண்ணன்'' ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ADMK O. Panneerselvam
By Irumporai Feb 06, 2023 10:06 AM GMT
Report

வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி என என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 ஈரோடுஇடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

அண்ணன் ஓபிஎஸ்

உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பை உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, கருத்துகேட்டு வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை இன்று மதியம் 3 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளார்.

இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். ஆதலால், அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி என தெரிவித்ததோடு, நம்முடைய அண்ணன் என ஓபிஎஸ்-ஐ குறிப்பிட்டு பேசியுள்ளார்.