கமல் ஆதரவளிப்பார் என நான் நம்பி இருந்தேன் : காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கமல்ஹாசன் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர் என ஈ.வி.கேஎஸ் . இளங்கோவன் தெரிவித்துள்ளர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அண்மையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆறுதல் கோரியிருந்தனர்.
கமல்ஹாசன் ஆதரவு
இந்த நிலையில் கமல்ஹாசன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிக்கு உதவுவோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கமல்ஹாசன் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர். எனவே, எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என, ஏற்கனவே நான் நம்பி இருந்தேன்; அதன்படி எனக்கு ஆதரவு அளித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.