அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி - திமுக எம்பி கனிமொழி

covid election dmk kanimozhi
By Jon Apr 05, 2021 10:53 AM GMT
Report

உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில வாரங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 3-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனால்,தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் எனக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன எனது உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.