எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி - காயத்ரி ரகுராம் அறிக்கை

Tamil nadu BJP Narendra Modi K. Annamalai
By Thahir Jan 14, 2023 02:08 AM GMT
Report

காயத்ரி ரகுராம் அவர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் அறிக்கை

இந்த நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‘என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

Thank you BJP for betraying me - Gayathri Raghuram

என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி.

எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்.

நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பு கொடுத்தது குறித்து, அபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை.

ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன்.

பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என தெரிவித்துள்ளார்.