கழுத்தில் பச்சை துண்டுடன் விஜய்: என்ன பேசினார்?

Vijay
By Fathima Mar 04, 2026 07:03 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிய நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது பேசுகையில், மக்களின் உண்மையான பிரதிநிதி நான், கிரிக்கெட்டில் சிஎஸ்கே-வுக்கு விசில் போடுவோமா அதேபோல் தவெகவுக்கு விசில் போடப் போறாங்க.

எனக்கும், மக்களுக்கும் நடுவில் யாரும் நுழைய முடியாது, இந்த தேர்தலில் தவெக-வுக்கு வெற்றி உறுதி.

அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன், நானும் டெல்டாகாரன் என யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை.

தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மிகப்பெரிய திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.


வாக்குறுதிகள்

- உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

- 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

- 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை 50% அளவில் ரத்து செய்யப்படும். இவற்றை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

- 2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலம் அற்ற விவசாயிகளுக்கு, அவர்களது குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் மத்திய அரசில் பணியாற்றவில்லை என்றால், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

- விவசாயிகளின் விருப்பதற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் அழுத்தம் இருந்தாலும், அதை தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக ஆட்சி நிற்கும்.

- நெல் கொள்முதல் நிலையங்களில், முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் வசதிகள் மேம்படுத்தப்படும். -

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை என்ற வரையறை நிர்ணயம் செய்யப்படும்