ஆசிரியர் கொலை வழக்கு - தனக்கு கிடைக்காத ரமணி..மதன்குமார் பரபரப்பு வாக்குமூலம்!
அரசு பள்ளி ஆசிரியர் குத்தி கொலை செய்ததது குறித்து மதன்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிரியர் கொலை
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியை ரமணியை, கடந்த புதன்கிழமை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மதன்குமார் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது காவல்துறையினரின் விசாரணையின் போது, மதன்குமார் அளித்த வாக்குமூலத்தில், தானும் ஆசிரியை ரமணியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறியுள்ளார்.
பலமுறை திருமணம் குறித்து பேசிய போது, பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ரமணி கூறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரை விட்டு ஓடிவிடலாம் என்பதற்கும் மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
வாக்குமூலம்
இதனால் தனக்கு கிடைக்காத ரமணி, வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு எடுத்து அவரை கொலை செய்ததாக மதன்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரமணியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்குள் ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னை பிடித்துவிட்டதாகவும் மதன்குமார் கூறியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.