தஞ்சையில் உள்ள குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த சசிகலா - காரணம் என்ன?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து சசிகலா விடுதலையானார். பின்னர், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கினார். தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலிலிருந்து விலகினார். இந்நிலையில் திடீரென சென்னையில் இருந்து சசிகலா காரில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று இரவு தஞ்சைக்கு வந்து அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார். இதனையடுத்து, இன்று தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தார்கள்.

இதையடுத்து அவர் நடராசனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றார். வருகிற 20-ந் தேதி நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமாகும். அன்று விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள நடராசனின் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் சசிகலா தஞ்சைக்கு வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரை சில அரசியல் பிரமுகர்கள் தஞ்சையில் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூறப்படுகிறது.