அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலி
அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து - வேன் விபத்து
கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வேளாண்கண்ணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இதில் 11 பேர் பயணம் செய்துள்ளனர்.
வேன் தஞ்சை செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்துக்கொண்டிருந்த போது, திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
6 பேர் பலி
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் வேனில் வந்த 7 பேரும், பஸ்சில் வந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தொடர்ந்து தகவலறிந்து விரைந்த போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
எனவே, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தற்போது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.