தஞ்சையிலும் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கம்

sasikala admk dmk
By Jon Feb 11, 2021 12:47 PM GMT
Report

தஞ்சையில் சுதாகரன் மற்றும் இளவரசி இருவருக்கும் சொந்தமான சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க உத்தரவிட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சை வ.உ.சி. நகரில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 3 வீட்டு மனைகள் அரசுடமையாக்கப்பட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் இடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசுடமை ஆக்கினார்.