காதலியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இளைஞன் - சிறுவர் உட்பட 4 பேர் கொடூரச்செயல்!
இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
தஞ்சாவூர், ரத்தநாடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், மாலை வீட்டிற்கு தனியாக சென்றவரை, தெற்குக் கோட்டையை சேர்ந்த கவிதாசன் (25) என்பவர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நால்வர் கைது
அங்கே கவிதாசனின் நண்பர்களான திவாகர் (26), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவும் எடுத்து கத்தி மற்றும் உடைந்த பீர் பாட்டிலால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து உடனே பாதிக்கப்பட்ட இளம்பெண் கவிதாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனை, சிறார் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். விசாரணையில், கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.