6 முறை MP'க்கு கல்தா - தஞ்சை வேட்பாளரான ஒன்றிய செயலாளர் - யார் இந்த முரசொலி.?

M K Stalin DMK Thanjavur Lok Sabha Election 2024
By Karthick Mar 20, 2024 06:33 PM GMT
Report

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 6 முறை எம்.பி'யான தற்போதைய எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியல்

திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியலை இன்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் 11 புதுமுகங்களும், 3 பெண்களும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 11 புதியவர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ளனர் தஞ்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி.

thanjavur-dmk-candidate-murasoli-history

வேட்பாளரை அறிவிக்கும் போது முதலமைச்சரும் தஞ்சையில் முரசொலியே நிற்கிறது என்று பூரிப்புடன் கூறினார்.6 முறை எம்.பி'க்கு மறுக்கப்பட்ட இடத்தில் ஒன்றிய செயலாளர் வேட்பாளராகியுள்ளதே விவாத பொருளாக மாறியுள்ளது.

6 முறை எம்.பி

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திய நபராக இருக்கின்றார். இது வரை 6 முறை அதாவது 1996 முதல் 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019-ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளார். எம்.பி என்பதை தாண்டி, மத்திய நிதித்துறை இணை அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2004 முதல் 2012 வரை 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

thanjavur-dmk-candidate-murasoli-history 

இவரை தாண்டி தஞ்சையில் யாரும் வெற்றி பெற முடியாது என்ற பிம்பம் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் உருவானது. 2014-ஆம் ஆண்டு தேர்தலில் டி.ஆர்.பாலு தஞ்சையில் போட்டியிட்ட போது, அவருக்கு எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் சார்பில் இருந்து பெரிதாக உதவிகள் வழங்கப்படவில்லை என்ற கூறப்படும் நிலையில், சொந்த மண்ணிலேயே டி.ஆர்.பாலு தோல்வியடைந்தார்.

யார் இந்த முரசொலி

இவ்வாறு, பெரும் ஆதிக்க சக்தியாக இருக்கும் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு பதிலாக இம்முறை வாய்ப்பை பெற்றுள்ளார் ஒன்றிய செயலாளர் முரசொலி. முரசொலி திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர்.

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

அந்த சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநரான எஸ்.கந்தசாமி நாட்டார் என்பவற்றின் பேரன் தான் முரசொலி.

thanjavur-dmk-candidate-murasoli-history

பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ள முரசொலி 2004-இல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாக, 2006 – 2011-இல் தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராக, திமுக பொதுக்குழு உறுப்பினராக 2014 முதல் 2020 வரையும், 2020-இல் தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக பதவி பெற்றார்.