தஞ்சை துணை மேயரின் குழந்தைக்கு தனது தந்தை கருணாநிதி பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இருந்தாலும், தேர்தல் களத்தில் இறங்கி மும்முரமாக செயலாற்றினார். வீடு வீடாக சென்று வாக்கு சேகர்த்தார் அஞ்சுகம். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார் அஞ்சுகம்.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி அஞ்சுகத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அஞ்சுகம் தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக பெற்றுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குழந்தையை நேரில் சந்தித்துள்ளார். அந்த குழந்தைக்கு கருணாநிதி என்று பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எங்கள் குழந்தைக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சற்று முன் கருணாநிதி என பெயர் சூட்டினார். எங்கள் குடும்பத்தில் சாதி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.