தஞ்சை பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா உறுதி

covid19 school student thanjavur
By Jon Mar 23, 2021 05:39 PM GMT
Report

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியர் மற்றும் 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதானல் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது , அதே சமயம் அங்கு பயிலும் ஆயிரத்து 200 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படது. இதில், 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது வரை தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 143 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது இதில், 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தாக தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள இரு பள்ளிகளுக்கு தலா 5 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.