தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களை உள்ளடக்கியது.
கும்பகோணம்,திருவிடைமருதூா், பாபநாசம், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, புதலூா், பட்டுக்கோட்டை மற்றும் பேராவுரணி ஆகிய 9 வட்டங்களையும் உள்ளடக்கி தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இங்கு விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோயில்கள், கலைகள், கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை.
கல்லணை, தஞ்சை பெரியகோயில்,சரபோஜி மஹால் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூல்நிலையம், பீரங்கி மேடை மற்றும் பல புராதரன சின்னங்கள் மேற்கண்ட ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.
மாவட்ட ஆட்சியர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு முதல் மாவட்ட ஆட்சியராக சார்லஸ் ஹாரீஸ் நியமிக்கப்பட்டார். இவர் பதவி காலம் டிசம்பர் 1799 முதல் மே 1804 ஆகும் .
இவரை தொடர்ந்து ஜான் காட்டன்,ஜே.வால்லேஸ்,ஜே.காட்டன், ஜேம்ஸ் ஹாப்ரெவ்,ஜே.தாக்கரேஜேம்ஸ் ஹாப்ரெவ் என்பவர்கள் தொடங்கி திரு. தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ் வரை என சுமார் 163 பேர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர்.
தீபக் ஜேக்கப் ஐஏஎஸ்
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 163 வது மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ் 24.05.2023 அன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். தீபக் ஜேக்கப் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் ஆகும். பி.டெக் படித்துள்ளார். 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்.
இவர் தஞ்சை மாவட்ட உதவி கலெக்டராகவும், தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதன் பின்னர் தேர்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலராகவும்,
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனராகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்த கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இவர் பணியாற்றி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்தார்.
பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ்
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த தீபக் ஜேக்கப் அவர்கள் பணியிடம் மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆட்சியராக மீண்டும் ஒரு பெண் பதவியேற்று அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரியங்கா பங்கஜம். 2015ல் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றவர் பயிற்சி ஆட்சியராக கோயம்புத்தூரில் பணியாற்றினார். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை சார் ஆட்சியராக பணி செய்தார்.
அதன் பிறகு திருப்பத்தூரில் சார் ஆட்சியர், கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி ) மதுரையில் பணி செய்தார். பின்னர் செயல் இயக்குனராக மகளிர் மேம்பாட்டு இயக்குநகரத்தில் பணியாற்றியவர். தற்போது தஞ்சை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.