குழந்தைக்கு 4 ஊசி போட்டாங்க.. உடனே செத்துட்டதா சொல்றாங்க - கதறும் தாய்!
தடுப்பூசி போட்ட பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு தடுப்பூசி
தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - கீதா தம்பதி. இவர்களின் பத்து மாத பெண் குழந்தை தரணிகா. குழந்தைக்கு பத்தாவது மாத தடுப்பூசி போட வேண்டும் என துறையூர் அங்கன்வாடி மையத்திலிருந்த செவிலியர் அழைப்பு கொடுத்திருக்கிறார்.
அதனையடுத்து கீதா குழந்தையை அங்கு கொண்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உடனே குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. உடனே கதறிய தாய் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கி சென்றுள்ளார்.
பரிதாப பலி
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேலும் 4 ஊசிகளை போட்டுள்ளனர். ஆனாலும் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் சில ஊசிகள் போட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் சில நிமிடங்களில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து விட்டது என்றும் உரிய விசாரணை நடத்த வேண்டும் அப்போது தான் குழந்தையின் உடலை வாங்குவோம் என குற்றம்சாட்டி கோஷமிட்டனர். அதனையடுத்து புகாரளித்த நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என் புள்ளையை கொன்னுட்டாங்க, என் புள்ளையை பாருங்களேன்.. இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நான்கு ஊசிகள் போட்டுள்ளனர். குழந்தைக்கு என்ன ஆனது ஏன் அடுத்தடுத்து ஊசி போட்டார்கள் என தெரியவில்லை என தாய் கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.