தஞ்சாவூர் தேர் விபத்து - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!
தஞ்சாவூர் தேர் விபத்து வேதனை அளிக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சையில் தேர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட விபத்து வேதனை அளிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்,காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை