தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் சசிகலா..!
தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வி.கே.சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் அப்பர் திருவிழா குருப்பூஜையை அடுத்து நேற்று நள்ளிரவு தேர் ஊர்வலம் நடைபெற்றது.
தேர் களிமேடு பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் திருப்பும் போது உச்சி பகுதி உயர் மின்னசார கம்பியில் மோதி தீ பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த 16 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் மேலும் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 11 ஆக உயர்ந்தது. காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார்.
சசிகலா தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ருவிழா விபத்துகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்க வேண்டும் என்று கூறினார்.
திருவிழாவில் தேர்களின் உயரங்களை நிர்ணயிப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், குறைகூறுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு என்று சசிகலா கூறினார்.