தஞ்சாவூர் சப்பரம் தீ விபத்து - 200 உயிர்களை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்..!
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று நடந்த அப்பர் சப்பரம் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
உயிரிழந்தவர்களின் உடலுக்கு குடியரசு தலைவர்,பிரதமர்,முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சப்பர திருவிழாவில் பங்கேற்ற 200 பேர் உயிரை மின்வாரிய ஊழியர் திருஞானம் காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சப்பர திருவிழா தீ விபத்தின் போது திருஞானம் வீட்டில் இருந்ததாகவும்,அப்போது மக்கள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது உடனே தீ பற்றி எரிந்து கொண்டிருந்த பகுதியை நோக்கி ஓடினார்.அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதையும் பொருட்படுத்தாமல் அந்த ஊழியர் உயர் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விவரம் சொல்லியுள்ளார்.
இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக களிமேட்டு பகுதிக்கு செல்லும் உயர்அழுத்த மின்பாதை இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியுள்ளார்.தற்போது அவர் தஞ்சையில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.